×

நல்ல கதைக்கு காத்திருக்கும் பாவனா

கடந்த மாதம் 6ம் தேதி பாவனா நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘அனோமி’ என்ற படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனா, பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘நான் தமிழில் நடிக்காததற்கு தனியாக எந்தவொரு காரணமும் இல்லை. நல்ல வாய்ப்புகள் என்னை தேடி வந்தால் கண்டிப்பாக நடிக்க தயார். அதே நேரத்தில் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நான் நடிப்பில் பிசியாகி விட்டேன். இப்போது ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்ற கான்செஃப்ட் முடிந்துவிட்டது.

‘அனோமி’ படமும் ஹீரோயினை மையப்படுத்திய படம் இல்லை. இந்த கதையில் நாங்கள் அனைவரும் ஒவ்வொரு கதாபாத்திரம், அவ்வளவுதான். மக்கள் நல்ல படங்களை ஆதரிப்பார்கள். வன்கொடுமை போன்ற கதைகள் என்னிடம் நிறைய வருகிறது. கண்மூடித்தனமாக அதுபோன்ற படங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. நல்ல கதாபாத்திரங்கள், நல்ல கதை அமைந்தால் நடிப்பேன். இந்த படத்துக்கு பிறகு நிறைய படங்கள் நடிப்பேன் என்றோ, இது என் கம்பேக் என்றோ நான் சொல்லமாட்டேன். இனிமேல் எனக்கு பிடி த்த மாதிரி ஒரு கதை வர 6 மா தங்கள் அல்லது ஒரு வருடம் ஆனால் கூட காத்திருந்து நடிப்பேன்’ என்றார்.

Tags : Bhavana ,
× RELATED தீவிர உடற்பயிற்சியில் நிதி அகர்வால்