- டி. சதீஷ்
- வி சேனல்
- டாக்டர்
- மோனிகா சின்னகோட்லா
- சதீஷ்
- ஐஸ்வர்யா தத்தா
- YouTube
- சுரேஷ் ரவி
- கருணாகரன்
- மோனிகா சின்னகோட்லா
தனியார் டி.வி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றும் சதீஷ், டாக்டர் மோனிகா சின்னகொட்லாவை காதலிக்கிறார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தாவுடன் சதீஷ் பெட்ரூமில் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையதளங்களிலும், யூடியூப்பிலும் வைரலாகிறது. அதன் பிறகான காமெடி களேபரம்தான் கதை.
கதையின் நாயகனான வந்து, காமெடி தர்பார் நடத்தி இருக்கிறார் சதீஷ். அவரது நண்பராக சுரேஷ் ரவி அளவாக நடித்துள்ளார். கருணாகரன் வழக்கமான டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைத்துள்ளார். மோனிகா சின்னகொட்லா, மானசா சவுத்ரி அழகாக இருக்கின்றனர், கேரக்டருக்கேற்ப நடித்துள்ளனர்.
பாவெல் நவகீதன், ஜாவா சுந்தரேசன் (சாம்ஸ்), உமா பத்மநாபன், லிவிங்ஸ்டன், புகழ், மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோரும் நடித்துள்ளனர். கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ, ஒளிப்பதிவு கச்சிதம். எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசை, இதம். எழுதி இயக்கிய பிரவீன் சரவணன், செம ஜாலியாக ஒரு படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார். காமெடி காட்சிகளில் புதுமை இல்லை. எனினும், ஓரளவு கவலைகளை மறக்க படத்தை பார்க்கலாம்.
