×

ரூ.73 லட்சம் வாடகை வீட்டில் சுஷ்மிதா

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர், சுஷ்மிதா சென். தமிழில் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான ‘ரட்சகன்’ என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஷக்கலக்க பேபி’ என்ற பாடலுக்கு ஆடியிருந்தார். பிறகு இந்தி, பெங்காலி படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், கடந்த 2015க்கு பிறகு திரையுலகை விட்டு விலகினார். இந்நிலையில், மும்பையிலுள்ள புதுவீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளார், சுஷ்மிதா சென்.

தற்போது அந்த வீட்டின் வாடகை குறித்த தகவல் வைரலாகி வருகிறது. அதன்படி அந்த வீட்டை ரூ.73.76 லட்சத்துக்கு சுஷ்மிதா சென் 3 ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அது மும்பையிலுள்ள ஓபராய் எக்ஸ்க்விசிட் என்ற ஆடம்பர குடியிருப்பு பகுதியில், சுமார் 1,241 சதுர அடி அளவில் அமைந்துள்ளது. மேலும், இந்த வீட்டுக்கு ரூ.6 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார் சுஷ்மிதா சென். இதையறிந்த நெட்டிசன்கள், வீட்டு வாடகை இவ்வளவா என்று அதிர்ச்சி அடைந்து கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.

Tags : Sushmita Sen ,Bollywood ,Sushmita Sen. ,Nagarjuna ,Shankar ,Mumbai ,
× RELATED தீவிர உடற்பயிற்சியில் நிதி அகர்வால்