×

இசை டு நடிப்பு: தேஜஸ் ஆசை

சென்னை: ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காற்றின் மொழி ‘ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தேஜஸ் கிருஷ்ணா. வளர்ந்ததும் அவரது முதல் சுயாதீன இசை ஆல்பமான ‘பரோட்டா வரட்டா..’ வெளியாகி, மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இவர் இசையமைப்பில் ‘பாத்த எடத்தில..’ சுயாதீன இசை ஆல்பத்தை வெளியிட்டார்.

இது குறித்து தேஜஸ் கிருஷ்ணா கூறும்போது, ‘‘தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் என்னுடைய இலக்கு நல்ல நடிகராகவும், இசை கலைஞராகவும் வலம் வந்து கலை சேவை செய்ய வேண்டும் என்பதுதான்.
இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், அனிரூத, சந்தோஷ் நாராயணன், சி. சத்யா போன்ற சாதனை படைத்திருக்கும் இசை மேதைகளை வழிகாட்டியாகவும், ரோல் மாடலாகவும் கொண்டு இசை துறையில் பயணித்து வருகிறேன்.

இசை ஆல்பங்களை உருவாக்குவதில் ஆர்வம் இருப்பதால் தொடர்ந்து இண்டிபெண்டட் மியூசிக் ஆல்பங்களையும் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறேன். கதை எழுதுவதிலும், மேடையில் இசையுடன் நடனம் ஆடுவதிலும் அலாதி விருப்பமும் உண்டு. ரொமாண்டிக் காமெடி கதையில் நடிக்க விருப்பம் இருந்தாலும் ஜாக்கி சான் போல் காமெடியாக சண்டைக் காட்சிகளில் நடிக்கவும் ஆசை இருக்கிறது’’ என்றார்.

Tags : Tejas Aasaay ,Chennai ,Tejas Krishna ,Jyothika ,
× RELATED தீவிர உடற்பயிற்சியில் நிதி அகர்வால்