×

கொட்டட்டும் பறை ராப் பாடல் ரிலீஸ்

 

சென்னை: ரஹெய்ன் கரானா அமைப்பின் ரிதமிக் ரூட்ஸ்-இன் 8வது பாடல் ‘கொட்டட்டும் பறை’ ராப் பாடல் வெளியாகி இருக்கிறது. தமிழக கலாசாரத்தை எடுத்துச்சொல்லும் பாடலாக இது அமைந்திருக்கிறது. செந்துழான் மற்றும் சிந்தூரி விஷால் ஆகியோரின் தமிழ் ராப் பாடலான ‘கொட்டட்டும் பறை’, பண்டைய மரபுகளை நவீன ஒற்றுமைக்கான கலவையாகவும் உள்ளது.

ரஹெய்ன் கரானா குழுவினர் கூறும்போது, ‘வெறும் இசை முயற்சி மட்டுமின்றி இசை காப்பகமாக நமது அமைப்பு திகழ்கிறது. ‘ஒரு நேரத்தில் ஒரு மாநிலம், ஒரு இசை’ என்ற நோக்கத்துடன், இந்தியாவின் தாள டி.என்.ஏ.-வை முறையாக வெளிக்கொணரும் முயற்சியாக ரஹெய்ன் கரானா செயல்படுகிறது. இதுவரை, ராஜஸ்தான், ஒடிசா, பஞ்சாப், கேரளா, ஹரியானா, காஷ்மீர், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் பாரம்பரிய கலைகளை ஆவணப்படுத்திய நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் தனது கலைப்பயணத்தை தொடங்கியுள்ளது’’ என்றனர்.

 

Tags : Chennai ,Rahein Gharana ,Tamil Nadu ,Senthujan ,Sindhuri Vishal ,
× RELATED கடலில் மூழ்கி நடிகர் மரணம்: படப்பிடிப்புக்கு சென்றபோது சோக சம்பவம்