சென்னை: சினிமா துறையில் ஏமாற்றுபவர்கள் அதிகம் என நடிகை பூஜா ஹெக்டே கூறினார். இது பற்றி அவர் கூறியது: காஸ்டிங் கோச் பிரச்னையை நடிகைகள் பலரும் எதிர்கொள்கிறார்கள். உங்களை இந்த படத்துக்காக தேர்வு செய்கிறோம் என போன் கால் வரும். அதை உண்மை என நம்பி ஏமாறும் போக்கு சினிமாவில் உள்ளது. ஆரம்ப காலங்களில் நானும் ஏமாந்துள்ளேன். இது பற்றி பேச எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. இப்போது ஒரு அந்தஸ்தை சினிமாவில் பெற்ற பிறகு, அனுபவம் காரணமாகவும் ஸ்டார்டம் காரணமாகவும் ஏமாற்றங்களை சந்திப்பதில்லை. ஆனால் புதுமுகமாக வரும் நடிகைகள் இன்றும் இதுபோல் பிரச்னையில் சிக்குவது சகஜமாகிறது. இந்தியில் நான் நடித்த சில படங்கள் ஓடவில்லை. படம் நன்றாக இருந்தால் ஓடப்போகிறது. அதற்காக வருத்தப்படுவதை விட, அதில் நான் செய்த தவறுகள் என்ன என்பதை கவனிப்பதில் நேரம் செலவிடுகிறேன். காரணம், சினிமா துறையில் வெற்றி, தோல்வி சகஜம். தோல்வியிலிருந்து பாடங்கள் கற்பதே முக்கியம். இவ்வாறு பூஜா ஹெக்டே கூறினார்.
