- அந்தோணி
- துல்கர் சல்மான்
- சினு ராமசாமி
- இளையராஜா
- ஓசை பிலிம்ஸ்
- ஜெனோசன்
- சுகிர்தான்
- கார்த்திக் சுப்பராஜ் ஸ்டோன் பெஞ்ச் கம்பனி
- கயல் வின்சென்ட்
- டி. ஜே பானு

இளையராஜா இசை அமைக்கும் ‘அந்தோனி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக்கை துல்கர் சல்மான், இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் இயக்குனரும், நடிகருமான தமிழ் வெளியிட்டனர். ஓசை பிலிம்ஸ் தயாரித்துள்ளது. டிரைலரை பார்த்த துல்கர் சல்மான், படக்குழுவினரை பாராட்டி படம் வெற்றிபெற வாழ்த்தினார். ஜெனோசன், சுகிர்தன் இணைந்து எழுதி இயக்கியுள்ளனர். இவர்கள் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனத்திலும், மேலும் சில படங்களிலும் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள். ‘கயல்’ வின்சென்ட் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
தவிர டிஜே பானு, சுதர்சன், சவுமி, அருள்தாஸ், நிழல்கள் ரவி, ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்தன் நடித்துள்ளனர். இலங்கை யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்ய, கலா மோகன் அரங்கம் அமைத்துள்ளார். சுரேஷ் ஏ.பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். இலங்கையில் நடந்த போருக்கு பிறகு ஏற்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை பற்றி சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது.

