×

மல்லுவுட்டை மயக்கிய ரியா ஷிபு

மலையாளத்தில் அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த ‘சர்வம் மாயா’ என்ற படம், கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஃபீல்குட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாக்கப்பட்ட இப்படம், ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதில் ஹீரோயினாக அறிமுகமான ரியா ஷிபுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதாவது, ‘பிரேமலு’ என்ற படத்தின் மூலம் மமிதா பைஜூக்கு கிடைத்த வரவேற்பை போல், ‘சர்வம் மாயா’ படத்தில் ரியா ஷிபு நடித்திருந்த மாயா மேத்யூ மஞ்சூரன் என்ற கேரக்டர் ரசிகர்களை வசியப்படுத்தியுள்ளது. அடுத்து அவர் நடிக்கும் படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மலையாளத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப் இணைந்து நடிக்கும் படத்தில் ரியா ஷிபு ஹீரோயினாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சுவாதி ஆர்.கிருஷ்ணா என்ற கேரக்டரில் அவர் நடிக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அருண் அனிருத்தன் இயக்கத்தில் உருவாகும் இப்படம், வரும் மே மாதம் 14ம் தேதி திரைக்கு வருகிறது. ரியா ஷிபு நடிகை மட்டுமல்ல, மலையாளம் மற்றும் தமிழ் பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ம் ஆண்டு வெளியான ‘தக்ஸ்’ என்ற படத்தை அவர் தயாரித்தார். இதில் அவரது சகோதரர் ஹிருது ஹாரூன் ஹீரோவாக நடித்தார். அதே ஆண்டில் ஜோதி தேஷ்பாண்டே, தனது தந்தை ஷிபு தமீன்ஸுடன் இணைந்து, ‘மும்பைகர்’ என்ற பான் இந்தியா படத்தை இணைந்து தயாரித்தார். 2024ம் ஆண்டு மலையாளத்தில் சூரஜ் வெஞ்சரமூடு நடித்த ‘முரா’ என்ற படத்தையும், கடந்த ஆண்டு விக்ரம், துஷாரா விஜயன் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன்: பார்ட் 2’ என்ற படத்தையும் இணைந்து தயாரித்தார்.

Tags : Rhea Shibu ,Malluwood ,Akhil Sathyan ,Nivin Pauly ,Mamita Baiju ,Maya ,
× RELATED இருவர் இயக்கத்தில் ‘அந்தோனி’