
புதிய படங்களுக்கு நிகராக ரீ-ரிலீஸ் படங்களும் அதிகமாக திரையிடப்படுகின்றன. வரும் 13ம் தேதி 3 படங்கள் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. 14ம் தேதி ‘காதலர் தினம்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா, நேஹா பென்ட்சே பயாஸ், நந்தா நடித்த படம், ‘மௌனம் பேசியதே’. இது கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி திரைக்கு வந்தது. இது அமீருக்கும், திரிஷாவுக்கு அறிமுக படமாகும். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக அறிமுகமான படம், ‘மின்னலே’. மாதவன், ரீமா சென், அப்பாஸ் நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி திரைக்கு வந்தது.
ஹாரிஸ் ெஜயராஜ் இசை அமைத்தார். கதிர் இயக்கத்தில் குணால், சோனாலி பிந்த்ரே நடித்த படம், `காதலர் தினம்’. கடந்த 1999ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி திரைக்கு வந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். டி.ராஜேந்தர் இயக்கி நடித்து இசை அமைத்த படம், ‘உயிருள்ளவரை உஷா’. இது கடந்த 1983ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி திரைக்கு வந்தது. கங்கா, நளினி, சரிதா, ராதாரவி, வெ.ஆ.மூர்த்தி நடித்தனர். இந்த 4 படங்களும் ரிலீசான நேரத்திலேயே மிகப்பெரிய வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

