- பிஜு மேனன்
- கேரள திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு
- மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்
- பெஃப்கா
- ஜனாதிபதி
- உன்னிகிருஷ்ணன்

மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய கேரளா திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தொழிலாளர்களின் பணி நேரத்தை குறைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் திரைப்படத்தின் அனைத்து பிரிவு பணியாளர்களின் பணி நேரம், 16 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பணியாளர்களின் ஊதியம் தொடர்பான மாற்றங்கள் ஓராண்டுக்கு பிறகே அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பெஃப்கா (கேரளா திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்) தலைவர் உன்னி கிருஷ்ணன் பேசினார். அப்போது அவர், ‘படப்பிடிப்புக்கு நடிகர்கள் தாமதமாக வருவதால், ஷூட்டிங் அட்டவணைகளும் மற்றும் தயாரிப்பும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
அதுபோல், ஒப்பந்தப்படி நடிகர்கள் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. குறிப்பாக, படத்தின் புரமோஷன்களில் நடிகர் பிஜூ மேனன் பங்கேற்பது இல்லை. அவரது பெயரை சொல்லி குறிப்பிட எனக்கு எந்த பயமும் கிடையாது. இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் ‘வலத்து வாஷத்தே கள்ளன்’ என்ற படத்தின் விளம்பர பணியை பிஜூ மேனன் தவிர்த்துவிட்டார். அதற்கு முந்தைய படத்திலும் இதுபோல் அவர் செய்ததால், தயாரிப்பாளருக்கு 25 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று சொல்லி கோபப்பட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

