×

தடயவியல் நிபுணர் ஆகிறார் பாவனா

சென்னை: பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ படத்தில் நடித்துள்ளார். இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதை அமைந்துள்ளார். படத்தில் பாவனா, ‘சாரா’ என்ற கதாபாத்திரத்தில் தடயவியல் நிபுணராக நடித்துள்ளார். ரகுமான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை டி சீரிஸ் ஃபிலிம் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் வழங்க குமார் மங்கத் பாதக் மற்றும் அபிஷேக் பாதக் தயாரித்துள்ளனர். ராஜேஷ் மேனன், ராம் மிர்சந்தானி, நிதின் குமார் மற்றும் மன்சூத் டி.பி. இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் ப்ளிட்ஸ்கெர்க் ஃபிலிம்ஸ், ஏபிகே சினிமா மற்றும் நடிகை பாவனாவின் சொந்த நிறுவனமான பாவனா ஃபிலிம் ப்ரொடக்ஷன்சும் தயாரிப்பில் இணைந்துள்ளன. வரும் பிப்.6ம் தேதி ரிலீசாகிறது.

Tags : Bhavana ,Chennai ,Riyaz Marath ,Sarah ,Rahman ,T Series Films ,
× RELATED பெட்ரூம் காட்சியில் நடித்ததால் கதறி அழுத ரச்சிதா ராம்: பரபரப்பு தகவல்