- ரோட்டர்டாம் திரைப்பட விழா
- நியூட்டன் சின
- 55வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழா
- செம்மலார் அண்ணாமலை
- இனிமை
- சுதார்
- வினோத் ஜானகிராமன்
- கர் பிரசாத்
நியூட்டன் சினிமா தயாரித்துள்ள ‘மயிலா’ என்ற படம், 55வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவின் ஃபிரைட் பியூச்சர் பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. குணச்சித்திர நடிகை செம்மலர் அன்னம் எழுதி இயக்கியுள்ள இப்படம், பணியாற்றும் பெண்களின் வாழ்க்கை மற்றும் அனுபவங்களை மையப்படுத்தி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மற்றும் அவர்கள் மீது கொண்டுள்ள பார்வைகளையும் தெளிவாக சித்தரிக்கிறது.
முக்கிய வேடங்களில் மெலடி, சுடர் நடித்துள்ளனர். வினோத் ஜானகிராமன் ஒளிப்பதிவு செய்ய, கர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். நியூட்டன் சினிமா நிறுவனம், புதிய தலைமுறை திரைப்பட கலைஞர்களை மையப்படுத்தி, உள்ளூர் யதார்த்தங்களை அடிப்படையாக வைத்து, உலகளாவிய தொடர்பை ஏற்படுத்தும் படங்களை தயாரிக்கிறது.
