×

மலையாள இயக்குனருடன் காதல் திருமணமா? ஈஷா ரெப்பா பதில்

சென்னை: தெலுங்கு படவுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர், ஈஷா ரெப்பா. தற்போது அவர் தமிழ் மற்றும் மலையாளத்திலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அவரிடம் சமீபகாலமாக உலா வரும் அவரது திருமண தகவல் குறித்து கேட்கப்பட்டது. அவரும், இயக்குனர் தருண் பாஸ்கரும் காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதுகுறித்து ஈஷா ரெப்பா கூறுகையில், ‘அந்த வதந்திகளை நானும் கேள்விப்பட்டேன். அது சம்பந்தமாக ஒரு கிண்டலான ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸையும் நான் பதிவிட்டேன். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத எந்த விஷயத்தையும் உங்களால் திட்டமிட முடியாது. சரியான நேரத்தில் மிகச்சரியான விஷயங்கள் நடக்கும். அதை நான் நம்புகிறேன். அதனால், அந்த வதந்திகளுக்கு நான் எந்த விளக்கமும் கொடுக்க விரும்பவில்லை. என் வாழ்க்கையில் முக்கியமானது ஏதாவது நடந்தால், அதை நானே வெளிப்படையாக அறிவிப்பேன்’ என்றார்.

Tags : Esha Reppa ,Chennai ,Tarun Bhaskar ,
× RELATED பெட்ரூம் காட்சியில் நடித்ததால் கதறி அழுத ரச்சிதா ராம்: பரபரப்பு தகவல்