×

மகளுக்காக சீரியஸ் மேக்கப்பில் வந்த ஸ்ரேயா

முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண், கடந்த 2018ல் ஆண்ட்ரூ கோச்சீவ் என்பவரை திருமணம் செய்த பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இந்தியில் ‘திரிஷ்யம் 3’ படத்தில் நடிக்கும் அவர், மகள் ராதாவுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் என்னதான் பிசியான நடிகையாக இருந்தாலும், ஒரு மகளுக்கு பாசமான தாய் என்பதை மறந்துவிட முடியாது. சமீபத்தில் எனது மகளின் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே கொண்டாடப்பட்டது. அதில் நான் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று மகள் சொல்லியிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக அன்று எனக்கு ஷூட்டிங் வைத்து விட்டனர்.

எனினும், அந்த டைரக்டரிடம் பெர்மிஷன் வாங்கி, இரண்டு மணி நேர இடைவெளியில், எனது கேரக்டருக்கான மேக்கப்பை கூட கலைக்காமல், அதே கெட்டப்பில் பள்ளிக்கு சென்று விழாவில் பங்கேற்றேன். கதைப்படி எனக்கு சீரியஸ் கேரக்டர் என்பதால், என்னை அந்த விழாவில் பார்த்த அனைவரும், எதற்காக நான் இவ்வளவு சீரியஸாக இருக்கிறேன் என்று விசாரித்தனர். அது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. எனது தொழிலை பற்றி அவர்களுக்கு நான் எப்படி விளக்கி சொல்வது? சில நேரங்களில் இப்படித்தான் நடக்கும். மகளுக்காக இதுபோன்ற விஷயங்களை செய்வதில் கிடைக்கும் மன திருப்தி வேறெதிலும் கிடைக்காது’ என்றார்.

Tags : Shreya ,Shreya Charan ,Andrew Kochiev ,Radha ,Sports Day ,
× RELATED 2027 ஏப்ரல் 7ல் ரிலீசாகும் ‘வாரணாசி’