×

ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் 6ம் ஆண்டு நினைவு தினம்!: ராமேஸ்வரம் அருகே உள்ள மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர், குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை..!!

ராமநாதபுரம்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ராமேஸ்வரம் அருகே உள்ள மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கலாமின் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாமின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் உள்ள கலாமின் மணிமண்டபத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அப்துல் கலாமின் குடும்பத்தினர் மணிமண்டபத்தில் சிறப்பு துவா செய்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். கடந்த 2017ம் ஆண்டு அப்துல் கலாம் மணிமண்டபம் திறக்கும் போது மணிமண்டபம் அருகே அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் அறிவுசார் மையம் அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அப்துல் கலாம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் 6ம் ஆண்டு நினைவு தினம்!: ராமேஸ்வரம் அருகே உள்ள மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர், குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : APJ Abdul Kalam ,Manimandapam ,Rameswaram ,Ramanathapuram ,Former ,President ,Abdul Kalam ,Mani Mandapam ,
× RELATED பெரியாறில் புதிய அணை கட்ட திட்டம் கேரள...