- பிரியா
- நிக்கி
- ஆதி
- நிக்கி கல்ராணி
- ஆனந்தராஜ்
- சுதான் சுந்தா ராம்
- பவானிசங்கர்
- ஏ ஆர். சரவணன்
- பேஷன் ஸ்டுடியோஸ்
- தங்கல் டிவி

கடந்த 2017ம் ஆண்டு வெளியான கற்பனை கலந்த காமெடி படமான ’மரகத நாணயம்’ வெற்றிபெற்றது. இதில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ் நடித்திருந்தனர். தற்போது ’மரகத நாணயம் 2’ படம் உருவாகிறது. இதுகுறித்து சுதன் சுந்தரம் கூறுகையில், ’முதல் பாகத்தின் தீவிர ரசிகன் என்பதால், 2ம் பாகத்தை தயாரிப்பில் பெருமைப்படுகிறேன். ஆதி, பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர்’ என்றார். முதல் பாகத்தை தொடர்ந்து 2ம் பாகத்தை ஏ.ஆர்.கே.சரவண் எழுதி இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் பிலிம் பேக்டரி, குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்கா ராம் சவுத்ரி, தேவ், கே.வி.துரை தயாரிக்கின்றனர்.
முக்கிய வேடங்களில் சத்யராஜ், நிக்கி கல்ராணி பினிஷெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் நடித்துள்ளனர். பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசை அமைக்கிறார். என்.கே.ராகுல் அரங்கம் அமைக்க, ஆர்.திருமலை ராஜன் எடிட்டிங் செய்கிறார். ராஜேஷ் கண்ணன் வசனம் எழுத, பி.சி ஸ்டண்ட்ஸ் சண்டைப் பயிற்சி அளிக்க, ரகு தாபா நடனப் பயிற்சி அளிக்கிறார். ரிலீஸ் தேதி முடிவாகவில்லை.

