
துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் அஜித் குமார் மற்றும் அவரது அணி பங்கேற்றுள்ளது. இந்நிலையில் அஜித் குமார் அளித்த பேட்டியில், ‘எனக்கு ஆதரவு கொடுக்க திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதை, எங்கள் அணி பரிசு வெல்வதை பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. எனது ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன். நல்ல காலம் காத்திருக்கிறது. எங்கள் அணி கண்டிப்பாக ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்தும்’ என்று கூறியுள்ளார்.

