×

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாளவிகா

இந்திய அளவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர், மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். பிறகு தனுஷ் ஜோடியாக ‘மாறன்’, பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகிறது.

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ என்ற பான் இந்தியா படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வரும் 9ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இந்நிலையில், படப்பிடிப்பில் எடுத்த கவர்ச்சி போட்டோவை பகிர்ந்துள்ள மாளவிகா மோகனன், தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Tags : Malavica ,Malavika Mohanan ,Rajinikanth ,Lokesh Kanagaraj ,Dhanush ,Maran ,Vikram ,Ranjit ,Karti ,Pan ,Prabas ,Maruti ,
× RELATED 81 வயது இயக்குனரின் கல்லூரி கலக்கல்