×

ஆர்.கே.செல்வா இயக்கத்தில் நடித்து மீண்டும் உதவியாளராக மாறிய மிஷ்கின்

 

சென்னை: ‘ப்ரிய முடன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’ உள்பட சில படங்களை இயக்கியுள்ள ஆர்.கே.செல்வா (வின்சென்ட் செல்வா), தற்போது கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘சுப்ரமணி’. கிரைம் திரில்லரான இதில் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் நடித்த ‘யூத்’, ஜித்தன் ரமேஷ் நடித்த ‘ஜித்தன்’ ஆகிய படங்களில் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மிஷ்கின். மற்றும் ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், திவ்யா, ஜாஸ்பர், சுவாமிநாதன் நடித்துள்ளனர். எஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரணவ், பாலாஜி தயாரித்துள்ளனர். அகிலேஷ், சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்’ சானுகா இசையில் அஸ்மின் பாடல்கள் எழுதியுள்ளார். படம் குறித்து ஆர்.கே.செல்வா கூறுகையில், ‘அன்று எனது உதவியாளராக பணியாற்றிய மிஷ்கின், இன்று எனது இயக்கத்தில் நடித்ததுடன், படப்பிடிப்பில் மீண்டும் எனது உதவி இயக்குனராக மாறி சில காட்சிகளை இயக்கினார். 5 கொலைச் சம்பவங்களை 3 காவல் அதிகாரிகள் அணுகி, யார் கொலையாளி என்று கண்டுபிடிப்பதுதான் இந்த படத்தின் கதை’ என்றார்.

 

Tags : Mysskin ,R.K. Selva ,Chennai ,Vincent Selva ,Vijay ,Jithan Ramesh ,Richard Rishi ,Nutty Natraj ,Divya ,Jasper ,Swaminathan ,S Productions ,
× RELATED 81 வயது இயக்குனரின் கல்லூரி கலக்கல்