×

ரெஜினா படத்துக்கு தொடரும் சோதனை

அருண் விஜய், இயக்குனர் அறிவழகன் இருவரும் ஏற்கனவே ‘குற்றம் 23’ படத்திலும், ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப்தொடரிலும் இணைந்து பணியாற்றினர். மீண்டும் அவர்கள் இணைந்த படம், ‘பார்டர்’. ஹீரோயின்களாக ரெஜினா, ஸ்டெபி பட்டேல் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இப்படம், பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லை.

இந்நிலையில், நாளை திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. தனது படத்துக்கு தொடர்ந்து ஏற்பட்டுள்ள சோதனையின் காரணமாக வருத்தப்படும் ரெஜினா, கார்த்திக் ராஜூ இயக்கத்தில் நடித்த ‘சூர்ப்பனகை’, காஜல் அகர்வாலுடன் நடித்துள்ள ‘கருங்காப்பியம்’ ஆகிய படங்கள் தொடர்ந்து தாமதமாகி வருவது குறித்து பெரிதும் கவலைப்படுகிறார்.

Tags : Regina ,
× RELATED மருத்துவமனையில்...