×

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றம்

ஏரல்: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் தசரா திருவிழா  நேற்று முன்தினம் இரவு கொடியேற்றம் நடந்தது. முன்னதாக மாலையில் தாமிரபரணியிலிருந்து காளியம்மன் கொடியுடன் ஏரல், சிறுத்தொண்டநல்லூர் தெருக்களில் வலம் வந்து இரவு 11 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

முக்கிய தசரா திருவிழா 19ம்தேதி நடக்கிறது. அன்றிரவு 1 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கற்பகபொன் சப்பரத்தில் எழுந்தருளி சிறுத்தொண்டநல்லூரில் வலம் வருதலும், 20ம்தேதி காலை ஏரல் நட்டார் கொண்ட அம்மன் கோயிலுக்கு வந்ததும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. தொடர்ந்து அம்மன் அங்கிருந்து ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் வருதலும், தாகசாந்தி மற்றும் சிறப்பு பூஜைக்கு பின் 11 மணிக்கு மெயின்பஜார் வழியாக சேனையர் சமுதாய உச்சினிமாகாளியம்மன் கோயிலுக்கு வருதலும், அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அம்மன், பேட்டை பந்தலில் அமரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

மாலை 6 மணிக்கு சேர்மன் கோயில் சார்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து அம்மன் மறுநாள் அதிகாலை 3 மணியளவில் சிறுத்தொண்டநல்லூர் கோயில் வந்து சேர்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.  ஏற்பாடுகளை சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags : festival ,Muthumalanallur Muthumalai Amman Temple ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...