×

ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்

வேட்டவலம்: வேட்டவலம் ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவரத்திரி விழா கோலகலமாக துவங்கியது. வேட்டவலம் பெரியார் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் நவராத்திரி விழா கோலகலமாக துவங்கியது. இக்கோயிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் நவராத்திரி விழா கொண்டப்படுவது  வழக்கம். அதன்படி கோயில் வளாகத்தில் விநாயகர், சரஸ்வதி, துர்கை முதலான சுவாமிகளுக்கு பல வகையான அழகு பொம்மைகள் கொலுவில் வைத்து, பூஜை செய்யப்பட்டது.

மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை ஆகியவையும் நடந்தது. பின்னர் கொலு மண்டபத்தில் அம்மன் பராசக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். முடிவில் பக்தர்களுக்கு கோயிலின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags : Navarathri Festival ,temple ,Ramalinga Chamundeswari Amman ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு