×

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகிவிட்டது. தலைப்புடன் பட அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. துணிவு படத்துக்கு பிறகு அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்தது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை. பக்கா ஆக்‌ஷன் கதை தனக்கு வேண்டும் என அஜித் கேட்டிருந்தார்.

ஆனால் அதுபோன்ற கதையை விக்னேஷ் சிவனால் உருவாக்க முடியவில்லை. இதையடுத்து அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் மகிழ் திருமேனியுடன் லைக்கா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதற்கிடையே வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்த அஜித், 2 தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். அன்றிரவே அஜித்தை மகிழ் திருமேனி சந்தித்து கதை சொன்னார். அஜித் விரும்பியதுபோல், முழுநீள ஆக்‌ஷன் கதையாக இருந்ததால், அஜித்துக்கு பிடித்துவிட்டது. இதையடுத்து இந்த படத்துக்கான ஒப்பந்தத்தில் மகிழ் திருமேனி கையெழுத்திட்டார்.

விரைவில் படத்தின் தலைப்புடன், பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ajith ,Thirumeni ,
× RELATED அமானுஷ்ய கதை ‘M G 24’