×

விஜய் சேதுபதி 'காக்கா முட்டை' மணிகண்டன் கூட்டணியில் தமிழ் வெப் சீரிஸ்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில்,  விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார். இயக்குநர் M.மணிகண்டன் 'காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை' மற்றும் 'கடைசி விவசாயி' போன்ற விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட, சூப்பர்ஹிட் படைப்புகளை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் சேதுபதி, விஜய் சேதுபதி தமிழில்  வெப் சீரிஸில் நடிப்பது இதுவே முதல் முறை.  இந்த புதிய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸின் படப்பிடிப்பு இன்று மதுரை அருகே உசிலம்பட்டியில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

7சி'ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்  தயாரிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். அஜித் குமார் படத்தின் எடிட்டராகவும், இம்மானுவேல் ஜாக்சன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். இந்த வெப் சீரிஸில் பங்குபெறவுள்ள மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Tags : Vijay Sethupathi ,Tamil ,
× RELATED திருட்டு பாடம் விஜய் சேதுபதி வௌியிட்ட டீசர்