×

ஜப்பானில் நாளை வெளியாகும் புஷ்பா 2

 

டோக்கியோ: அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ தற்போது ஜப்பானிலும் வெளியாக தயாராக உள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இந்த படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக மாறியது. படத்தின் தொடக்கத்தில் புஷ்பாவின் அறிமுக சண்டைக்காட்சி ஜப்பானில் படமாக்கப்பட்டது மட்டுமல்லாது, அதில் அல்லு அர்ஜுன் ஜப்பானிய மொழியிலும் சரளமாக வசனம் பேசும்படியும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

நாளை (ஜனவரி 16ம் தேதி) ஜப்பானில் படம் வெளியாகவுள்ள நிலையில், குடும்பத்துடன் டோக்கியோ சென்றுள்ள நடிகர் அல்லு அர்ஜூன் தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை புரமோட் செய்து வருகிறார்.

டோக்கியோ நகரத்தின் அழகிய ஸ்கைலைன் இடம்பெற்ற புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் அல்லு அர்ஜூன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் உடன் இணைந்து, இந்தப் படத்தை ஜப்பானில் ’புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் கீக் பிக்சர்ஸ் மற்றும் சோசிகு நிறுவனங்கள் வெளியிடுகின்றன. சுமார் 250 திரையரங்குகளில் இந்த படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

Tags : Japan ,Tokyo ,Allu Arjun ,Pushpa ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி