- மோகன்.ஜி. சென்னை
- நேதாஜி புரொடக்ஷன்ஸ்
- சோலா
- சக்ரவர்த்தி
- ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன்
- மோகன்.ஜி
- தென் இந்தியா
- ரிச்சர்ட் ரிஷி
- ரக்ஷனா இந்துசுதான்
- நட்டி நடராஜ்
- ஒய்.ஜி.மகேந்திரன்
- நாடோடிகள் பரணி
- திவி
- தேவயானி சர்மா
- சரவண சுப்பையா
- சிராக் ஜானி
- வேலா
- ராமமூர்த்தி
- பிலிப் கே. சுந்தர்
- பத்மா சந்திரசேகர்
சென்னை: நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்துள்ள படம், ‘திரௌபதி 2’. கடந்த 14 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நடந்ததை மையமாக வைத்து மோகன்.ஜி இயக்கியுள்ளார். ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷணா இந்துசூடன், நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், ‘நாடோடிகள்’ பரணி, திவி, தேவயானி சர்மா, சரவண சுப்பையா, சிராக் ஜானி, வேல.ராமமூர்த்தி நடித்துள்ள பான் இந்தியா படமான இது விரைவில் திரைக்கு வருகிறது. பிலிப் கே.சுந்தர் ஒளிப்பதிவு செய்ய, பத்மா சந்திரசேகர் வசனம் எழுதியுள்ளார்.
ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார். படம் குறித்து மோகன்.ஜி கூறியதாவது: 25 ஹீரோயின்களை பார்த்த பிறகுதான் ரக்ஷணா இந்துசூடனை தேர்வு செய்தேன். மற்ற ஹீரோயின்கள் திவி, தேவயானி சர்மா ஆகியோருக்கு தமிழ் தெரியாது என்றாலும், கஷ்டப்பட்டு புரிந்துகொண்டு பேசி நடித்துள்ளனர். நம்முடன் சகோதரர்களாக வாழ்ந்து வரும் இந்திய இஸ்லாமியர்களை இப்படம் எந்தவகையிலும் காயப்படுத்தாது.
அவர்களின் தொடக்கம் எது என்பதை புரியவைக்கும். மற்றபடி இது ஒரு கமர்ஷியல் படம். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘சிறை’, ‘மதராச பட்டினம்’ போன்ற படங்களில் பிரிட்டீஷ்காரர்களை காட்டும்போது, மத அடையாளங்கள் இல்லாமல் அவர்களை பிரிட்டீஷ்காரர்களாக மட்டுமே எப்படி ஏற்றுக்கொண்டீர்களோ, அதுபோல் இப்படத்தையும் பார்க்க வேண்டும்.
