×

சூர்யாவின் உதவியை மறக்க முடியாது: ‘வா வாத்தியார்’ ரிலீஸ் பற்றி கார்த்தி

 

சென்னை: ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, நலன் குமாரசாமி இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம் ‘வா வாத்தியார்’. இதில் நடித்தது குறித்து கார்த்தி கூறியதாவது: கடந்த வருடம் படத்தை வெளியிட திட்டமிட்டோம். அது முடியவில்லை. எனது முதல் படமான ‘பருத்திவீரன்’ படமும், அடுத்த படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் இதுபோல்தான் தள்ளிப்போனது.

அதனால், தாமதம் என்பது எனக்கு புதிது இல்லை. எனக்கு அது பழகிவிட்டது. எனது தந்தை சிவகுமார், ‘இங்குள்ள ஒவ்வொரு அரிசியிலும் யார், யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும்’ என்று சொல்வார்.  அதுபோல், சினிமாவில் ஒவ்வொரு பிரேமிலும் யார், யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும். அவர் சொன்னது அப்போது புரியவில்லை.

இப்போது புரிகிறது. எனது அண்ணன் சூர்யாவின் உதவி இல்லாமல் இப்படம் ரிலீசாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களை பார்த்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அது இப்படத்தில் நடிக்க உதவியாக இருந்தது. எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தி படத்தை வெளியிட்டுள்ளோம். இது அனைத்து தரப்பினருக்குமான படம், ஆதரவு கொடுங்கள்.

Tags : Surya ,Karti ,Chennai ,Studio Green Charb K. ,Gnanavel Raja ,Nalan Kumarasamy ,Karthi ,Sivakumar ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி