×

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு : கோவிஷீல்டு ரூ.205 , கோவாக்சின் ரூ.215 ஆக அதிகரிப்பு!!

டெல்லி : இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அவற்றின் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சீரம் மற்றும் பாரத் பையோடெக் ஆகியன நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு புதிய ஒப்பந்தங்களை செய்துள்ளது.இந்த புதிய ஒப்பந்தங்களின்படி ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியின் கொள்முதல் விலை ரூ.215 ஆகும். ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசியின் கொள்முதல் விலை ரூ.225 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.ஜூன் 21ம் தேதி அமலுக்கு வந்த ஒன்றிய அரசின் மாற்றியமைக்கப்பட்ட தடுப்பூசி கொள்முதல் கொள்கைகளில் அடிப்படையில் தடுப்பூசிகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், புதிய ஒப்பந்தம் மூலமாக கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. …

The post இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு : கோவிஷீல்டு ரூ.205 , கோவாக்சின் ரூ.215 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Covishield ,Covaxin ,Delhi ,Covisfield ,India ,Corona ,Dinakaran ,
× RELATED கோவிஷீல்டு உற்பத்தி 2021 டிசம்பரிலேயே நிறுத்தம்: சீரம் நிறுவனம் விளக்கம்