×

பிரதமர் மோடிக்கு விடை கொடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

டெல்லி: பிரதமர் மோடிக்கு விடை கொடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ஜூன் 4-ம் தேதி பிரதமர் மோடிக்கு மக்கள் விடை கொடுத்துவிடுவார்கள். ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அறுதிப் பெரும்பான்மை இடங்கள் கிடைத்துவிடும் ஜெய்ராம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது 4 கட்டங்களாக நடந்துள்ள தேர்தலில் 379 எம்.பி. தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது. 4 கட்டத் தேர்தல் முடிந்த பின், பிரதமர் பிரச்சார கூட்டத்தில் பேசும் வார்த்தைகளே சர்ச்சைக்குரியதாக உள்ளன. நாட்டில் எந்த அலையும் இல்லை; பாஜகவினரின் பிரச்சாரமே மக்களிடம் எடுபடவில்லை என்றும், அரசின் மீது மக்களுக்கு கோபம் ஏற்பட்டு உள்ளதாகவும், மாற்றத்தையும் மக்கள் விரும்புவதாகவும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளர்.

 

The post பிரதமர் மோடிக்கு விடை கொடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Congress ,General Secretary ,Jairam Ramesh ,Delhi ,Modi ,Secretary General ,
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...