×

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரிய டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் காவல் நீடிப்பு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் காவல் 30ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்தாண்டு பிப். 26ம் தேதி கைது செய்தது. தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் தொடர்ந்து சிசோடியாவிடம் விசாரித்து வருகின்றது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக கடந்த வாரம் சிசோடியா இடைக்கால ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால், சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, மணீஷ் சிசோடியா மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார். அவரது காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் வரும் 30ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரிய டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் காவல் நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Deputy Chief Minister ,Manish Sisodia ,New Delhi ,Aam Aadmi Party ,Central Bureau of Investigation ,CBI ,Delhi government ,
× RELATED புதிய மதுபான கொள்கை வழக்கில்...