×

ஜிப்ஸி காலனியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு தடுப்பூசி முகாம் ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை அதிகம் தாக்கும் என்பது யூகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: கோட்டூர்புரம் ஜிப்ஸி காலனியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடைபெற்றது. ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை தான் அதிகம் தாக்கும் என்பது யூகம் தான் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, கோட்டூர்புரம் ஜிப்ஸி காலனியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமினை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும், 1 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 985 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 7,63,280 தடுப்பூசிகள் உள்ளன. ஜிகா வைரஸ் அச்சம் தமிழகம் முழுவதும் இருக்கிறது. கேரளாவில் இதுவரை 18 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கேரளாவில் இருந்து வருபர்களையும் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை தான் அதிகம் தாக்கும் என்பது யூகம் தான். கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, குழந்தை பிறந்துள்ளது. இருவரும் நலமுடன் இருக்கிறார்கள். கருப்பு பூஞ்சையால், 122 பேர் உயிரிழந்துள்ளனர்; 100க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர் என்றார். அதைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்புக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மழைக்காலத்துக்கு முன்பே கால்வாய்கள் தூர்வாரும் பணிகளும் நடந்து வருகிறது. மாநகராட்சி நிதியில் இருந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு கூறினர்….

The post ஜிப்ஸி காலனியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு தடுப்பூசி முகாம் ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை அதிகம் தாக்கும் என்பது யூகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : colony ,Minister ,Ma. ,Subharamanyan ,Chennai ,Kottupuram Gypsy Colony ,Ma ,
× RELATED கடத்தூர் கிராமத்தை மதிப்பீடு செய்த...