×

ஜெயம் ரவி படத்தில் அனுபமா

சென்னை: ஜெயம் ரவி படத்தில் முக்கிய வேடத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் சைரன். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். காமெடியுடன் கதைக்கு முக்கியமான வேடத்தில் யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி நடிக்கிறார்கள். இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார். மலையாள நடிகையான அனுபமா, தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி, அதர்வாவுடன் தள்ளிப்போகாதே படங்களில் நடித்தார். சைரன் படத்தில் இவர் ஜெயம் ரவிக்கு ஜோடி கிடையாது. நெகட்டிவ் கேரக்டரில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. அஜித் நடித்த விஸ்வாசம், விஷால் நடித்த இரும்புத்திரை படங்களில் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்ட ஆண்டனி பாக்யராஜ் இந்த படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சைரன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இந்த படத்தை வேகமாக படமாக்கி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Tags : Anupama ,
× RELATED சில்லி பாயின்ட்…