×

பட விழாவில் பங்கேற்க பணம் கேட்டேனா? அனுபமா பதில்

சென்னை: தமிழில் தனுஷுடன் கொடி, அதர்வா ஜோடியாக தள்ளிப் போகாதே படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது தெலுங்கில் கார்த்திகேயா 2, 18 பேஜஸ், பட்டர்ஃபிளை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் நிகில் சித்தார்த்துக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள கார்த்திகேயா 2 படம் ஆகஸ்ட் 12ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. சமீபத்தில் நடந்த இந்த படத்துக்கான நிகழ்ச்சிகளில் ஹீரோ நிகில் சித்தார்த் மட்டுமே பங்கேற்றார். அனுபமா பங்கேற்கவில்லை.  புரமோஷனில் பங்கேற்க தனியாக சம்பளம் தராததால் இதில் அனுபமா பங்கேற்கவில்லை என புகார் எழுந்தது.

இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக அனுபமா பரமேஸ்வரன் கூறும்போது, ‘கார்த்திகேயா 2 படத்தின் விழாக்களில் பங்கேற்காததால் என் மீது எழுந்துள்ள புகாரால் பாதிக்கப்பட்டுள்ளேன். இப்போதைக்கு இரண்டு தெலுங்கு படங்களில் இரவு பகலாக தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்து வருகிறேன். அதோடு கார்த்திகேயா 2 படத்தின் நிகழ்ச்சி வெளியீட்டு தேதிகள் எதிர்பாராதவிதமாக அவ்வப்போது மாற்றப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால்  எனது கால்ஷீட்டை மற்ற படங்களுக்கு கொடுத்து விட்டேன். இந்த நேரத்தில் திடீரென்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 12 என்று அறிவிக்கப்பட்டபோது என்னால் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. புரமோஷனில் பங்கேற்க தனி சம்பளம் கேட்டதாக சொல்வதெல்லாம் பொய். இவ்வாறு அனுபமா பரமேஸ்வரன் கூறினார்.

Tags : Anupama ,
× RELATED சில்லி பாயின்ட்…