×

நெட்டிசனுக்கு யாஷிகாவின் பதிலடி

விபத்தில் சிக்கி மீண்ட யாஷிகா ஆனந்த், இப்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவிலும் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ரசிகர், ‘படு கவர்ச்சியாக உடை அணிந்து இதுபோல் போஸ் தருகிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?’ என யாஷிகாவை கேட்டார். இதை பார்த்து கோபப்படாமல் கூலாக யாஷிகா பதில் சொல்லியிருக்கிறார்.

‘எனது தலை முடியை கூட காட்டி என்னால் போஸ் தர முடியும். அதுவும் உங்களுக்கு பிரச்னையாகுமா? என்னை பிடிக்காதவர்கள் பலர் இருக்கலாம். பிடித்தவர்களும் பலர் உள்ளனர். அவர்களின் ஆதரவும் அன்பும் எனக்கு போதும்’ என சொல்லியிருக்கிறார் யாஷிகா. அந்த ரசிகரிடமிருந்து திரும்பவும் பதிலே இல்லை.

Tags : Yashika ,Netizen ,
× RELATED சென்னையில் 2.5 வயது குழந்தை கன்னத்தை...