- கௌதம் கார்த்திக்
- அஞ்சனா நேத்ரன்
- சென்னை
- கணேஷ் கே. பாபு
- தினா ராகவன்
- ராஜு முருகன்
- எச்.வினோத்
- ஐந்து நட்சத்திரம்
- கே செந்தில்
- கௌதம் ராம் கார்த்திக்
சென்னை: ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு தயாரிப்பாளர் ஆகியுள்ளார். அவர் தயாரிக்கும் முதல் படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி பணிகள் வரை வேகமாக நடைபெற்று வருகின்றன. தினா ராகவன் இயக்குகிறார். இவர் ராஜு முருகனின் உதவி இயக்குனர். பட துவக்க விழாவில் இயக்குநர்கள் ஹெச். வினோத், ராஜு முருகன் மற்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கே செந்தில் கலந்துகொண்டனர். கௌதம் ராம் கார்த்திக், அஞ்சனா நேத்ரன், செல்வராகவன், ராபி, பி. வாசு, ஏ. வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இசை சாம் சிஎஸ். வசனம் ராஜு முருகன். ஒளிப்பதிவு பிரதீப் காளிராஜா. கலை இயக்கம் தா. ராமலிங்கம். படத்தொகுப்பு தீபக் எஸ்.

