- இங்கிலாந்து
- முரளி
- சென்னை
- அம்பத்தூர் ஆனந்தம் அறக்கட்டளை
- காமராஜ்
- அரங்
- தேனாம்பேட்டை
- கங்கை அமரன்
- கங்கா
- Rehana
- ஆனந்தம்
சென்னை: சென்னை அம்பத்தூர் ஆனந்தம் அறக்கட்டளையிலுள்ள ஆதரவற்ற முதியோர் மற்றும் தாய், தந்தை இல்லாத குழந்தைகளின் நலனுக்காக இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்று காலை 10 முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 முதல் மாலை 5 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 10 மணி வரையுமாக, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் 3 பகுதிகளாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கங்கை அமரன், கங்கா, ரெஹானா உள்பட பலர் பாடுகின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆனந்தம் அறக்கட்டளை சார்பில் பகீரதி ராமமூர்த்தி, சேஷாத்திரி, வினோத், ஆர்த்தி ஆகியோர் செய்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்து, மெல்லிசை நிகழ்ச்சி நடத்தி வரும் யு.கே.முரளிக்கு இசைத்துறையில் இது 40வது வருடமாகும்.

