×

கோவா பட விழாவில் ஆக்காட்டிக்கு கவுரவம்

சென்னை: 56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில் WAVES Film Bazaar பிரிவின் கீழ் சிறந்த திரைப்பட அடையாள விருதை ஆக்காட்டி திரைப்படம் பெற்றுள்ளது. படத்தின் இயக்குனர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குனர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர். தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்பின் மூலம் கவனம் பெற்ற ஆண்டனி மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் முல்லையரசி , சிறுவனாக சுபாஷ் நடித்துள்ளனர். எஸ்.இ.எசக்கி ராஜா ஒளிப்பதிவு, ராம் குமார் எடிட்டிங், தீபன் சக்ரவர்த்தி இசை. பாடல்கள் கார்த்திக் நேத்தா.

Tags : Akkatti ,Goa Film Festival ,Chennai ,WAVES ,56th International Goa Film Festival ,Jai Lakshmi ,Sunil Kumar ,Hari Prasad ,Sukumar Shanmugam ,South Tamil Nadu ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி