×

வரலாற்று கதையில் ரக்‌ஷணா

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் ‘திரௌபதி 2’ என்ற படத்தில், திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரக்‌ஷணா இந்துசூடனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இயக்குனர் மோகன்.ஜியின் கதையில் தீவிரமான, ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கதாபாத்திரம், ‘திரெளபதி’ ஃபிரான்சைஸில் முக்கியமான ஒன்றாக இருக்கும். நேதாஜி புரொடக்‌ஷன்ஸ், ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் சோழ சக்ரவர்த்தி தயாரித்துள்ள இப்படம், கடந்த 2020ம் ஆண்டு வெளியான ‘திரௌபதி’ என்ற படத்தின் தொடர்ச்சியாக, அதன் வரலாற்று உலகத்தை வெளிப்படுத்த இருக்கிறது.

14ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட இப்படத்தில், ஹோய்சால பேரரசர் வீர வள்ளலார் IIIன் ரத்தக்கறை படிந்த ஆட்சி, சேந்தமங்கலம் காடவராயர்களின் வீரம், எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டில் முகலாய படையெடுப்பால் ஏற்பட்ட கொந்தளிப்பு ஆகியவற்றின் பின்னணியில் கதை விரிவடைகிறது. கடந்த காலத்தின் இந்த பிரமாண்டமான மறுகட்டமைப்பில், திரௌபதி தேவியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிமுகம், படத்தின் உணர்ச்சிகரமான தருணத்தை 2ம் பாகத்துடன் வலுவாக இணைக்கும் புள்ளியாக மாறுகிறது. போஸ்டரில் ரக்‌ஷணா இந்துசூடன், கலாச்சார ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்ணியத்துடனும், கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறார்.

ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், ‘நாடோடிகள்’ பரணி, சரவண சுப்பையா, வேல.ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கவுரங், திவி, தேவயானி சர்மா, அருணோதயன் நடித்துள்ளனர். பிலிப் ஆர்.சுந்தர் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார். பத்மா சந்திரசேகர், மோகன்.ஜி வசனம் எழுதியுள்ளனர். தேவராஜ் எடிட்டிங் செய்துள்ளார்.

Tags : Rakshana ,Draupadi Devi ,Mohan.ji ,Chola Chakravarthy ,Netaji Productions ,GM Film Corporation ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி