×

விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

விஜய் சேதுபதி, சம்யுக்தா, புரி ஜெகன்நாத், சார்மி கவுர், ஜேபி நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைய, புரி கனெக்ட்ஸ் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படம், அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில், ‘புரி ஜெகன்நாத், சார்மி மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் என்றென்றும் நினைவில் நிற்கக்கூடியதாக இருக்கும். அவர்களை நான் நிறைய மிஸ் செய்கிறேன்’ என்று நெகிழ்ந்தார். அவரை ெதாடர்ந்து புரி ஜெகன்நாத், சார்மி கவுர் ஆகியோரும் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டனர். புரி ஜெகன்நாத், சார்மி கவுர் தயாரித்துள்ளனர்.

ஜேபி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. முக்கிய வேடங்களில் தபு, துனியா விஜய் குமார் நடித்துள்ளனர். ‘அர்ஜூன் ரெட்டி’, ‘அனிமல்’ ஆகிய படங்களில் அதிரடியான இசையால் கவனத்தை ஈர்த்து தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசை அமைத்துள்ளார். நகைச்சுவை வேடங்களில் பிரம்மாஜி, விடிவி கணேஷ் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை.

Tags : Vijay Sethupathi Laichi ,Vijay Sethupathi ,Samyuktha ,Puri Jagannath ,Charmi Kaur ,JP Narayan Rao Kondrola ,Puri Connects ,Charmi ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி