×

ராஜேஷ்குமார் நாவல் வெப்சீரிஸ் ஆனது

சென்னை: ‘ரேகை’ வெப்சீரிஸ் நவம்பர் 28ம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக்கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த தனித்துவமான தமிழ் சீரிஸை, தினகரன் எம். உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீரிஸை எஸ்.எஸ். குரூப் புரொடக்‌ஷன் சார்பில் எஸ். சிங்காரவேலன் தயாரித்துள்ளார். எழுத்தாளர், இயக்குனர் தினகரன் எம். கூறியதாவது: நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு வன்முறையைக் குறித்து இந்தத் சீரிஸ் பேசுகிறது. போலீஸ் புகாராக கூட மாறாத அந்த வன்முறை, பலர் வாழ்க்கையைச் சிதைக்கிறது. அந்த அசௌகரியத்தையும், யாரை நம்புவது என்ற குழப்பத்தையும் பார்வையாளர்கள் உணர வேண்டும் என்பதே என் நோக்கம்.

Tags : Rajesh Kumar ,Chennai ,G5 OTD ,Dinakaran M. ,Balahasan ,Bavithra Janani ,Vinodini Vaithianathan ,S. S. S. ,Group Production ,Singaravelan ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி