×

ஓடிடியில் ஒளிபரப்பாகிறது கத்ரீனா கைப் திருமணம்

பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலும், நடிகை கத்ரீனா கைபும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள். இப்போது அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அவர்களின் திருமணம் டிசம்பர் 9ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் சொகுசு அரண்மணையில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது.

விழா பிரமாண்டமாக இருந்தாலும் திருமணத்திற்கு 120 பேருக்கு  மட்டுமே அழைப்பு. அனைவருமே பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள். திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் புகைப்படம் எடுக்கவோ, அதை வெளியிடவோ அனுமதி இல்லை. இந்த நிலையில் இவர்கள் திருமணத்தை ஒடிடியில் வெளியிட ஒரு பெரிய தொகை கொடுத்து உரிமம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Tags : Katrina Kaif ,ODD ,
× RELATED கொள்ளு தாத்தா நேரு, தாத்தா, பாட்டி,...