×

யாக்ஷினி வேடம் சவாலாக இருந்தது: வேதிகா

சென்னை: பான் இந்தியா நடிகையாக மாறியுள்ள வேதிகா, திரைப்படங்களில் நடித்தது மட்டுமின்றி, தற்போது வெப்தொடரிலும் நடித்திருக்கிறார். அவர் நடித்துள்ள ‘யாக்ஷினி’ என்ற வெப்தொடர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய வேதிகா, ‘யாக்ஷினி’ என்ற வெப்தொடரில் முதன்மையான கேரக்டரில் நடித்துள்ளேன்.

அதிக சக்தி வாய்ந்த கேரக்டரில் நடிக்கும்போது கூடுதல் பொறுப்பு இருக்கும். இந்தக் கேரக்டர் நீண்ட நேரம் உருவானாலும், படப்பிடிப்பின்போது என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள நேரம் கிடைக்கவில்லை. யாக்ஷினி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, எனக்கு உடல்ரீதியாக மிகப்பெரிய சவாலாக இருந்தது. மேக்கப் அணிந்து கலைக்க பல மணி நேரமானது. ஆனால், நான் செய்த முயற்சிகள் அனைத்தும் அதற்கு மிகவும் தகுதியானவைதான்’ என்றார்.

The post யாக்ஷினி வேடம் சவாலாக இருந்தது: வேதிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yakshini ,Vedika ,CHENNAI ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...