×

ஆண் வேடத்தில் வரலட்சுமி அலப்பறை

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ என்ற படம் மூலம் நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது ‘ரிஸானா – எ கேஜிடு பேர்ட்’ என்ற சர்வதேச படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் அதில் வித்தியாசமான வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒரு நாள் ரோல் ரிவர்ஸ் செய்யப்பட்டு பெண்கள், ஆண்களை போல நடந்து கொண்டால் எப்படி இருக்கும்’ என்பதுபோல ஒரு கற்பனை வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஆண்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை பெண் பேசினால் எப்படி இருக்கும் என்பது போலவும், நடந்து செல்லும் பெண்ணிடம் ஒரு ஆண் செய்யும் சேட்டைகளை ஒரு பெண், ஆணிடம் செய்வது போலவும் வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நடிகைகள் திரிஷா, சமந்தா போன்றோர் சிரிக்கும் இமோஜியை அனுப்பி தங்களின் ரியாக்சனை கொடுத்துள்ளனர். இது காமெடியாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராக ஆண்கள் செய்யும் செயலை கண்டித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Tags : Varalakshmi ,Varalakshmi Sarathkumar ,Sarathkumar ,Bala ,
× RELATED 81 வயது இயக்குனரின் கல்லூரி கலக்கல்