×

மாண்டஸ் புயல் எச்சரிக்கை விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலால், விமான நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார், பொதுமேலாளர் ராஜு, விமானநிலைய வானிலை இயக்குனர் துரை ஆகியோரின் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் வான்வெளி பகுதி களப்பணி நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், வான்போக்குவரத்து தொடர்புத்துறை, விமானப்படை, கடலோர காவல்படை உட்பட, பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 72 மணி நேரத்திற்கு பார்ட்ஸ் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   புயலால் உருவாகும் சூழ்நிலையை கையாள்வதற்கான அனைத்தும் தயார்நிலையில் இருக்க வேண்டும். காற்று பலமாக வீசும்போது, ஏடிஆர் ரக சிறிய விமானங்கள் பாதிப்புக்குள்ளவதை தவிர்க்க, விமானங்களை, விமான நிலையங்களில் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும். அட்டவணையில் இல்லாத விமானங்கள், பாதுகாப்பை கருதி, சென்னைக்கு வெளியே வேறு, விமான நிலையங்களில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் எந்த பகுதிகளில் சூழ்நிலைகள் மோசமாக இருக்கிறதோ, அந்தப் பகுதிகளுக்கு விமான சேவைகளை இயக்காமல், விமான சேவைகளை தற்காலிகமாக ரத்துசெய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அதோடு விமான பயணிகள் விமான நிலைய ஊழியர்கள் விமான நிறுவன பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தேவையான உணவுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என, கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் பயணிகள் ஊழியர்கள் உட்பட யாரும் அச்சப்படத் தேவையில்லை அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் விமானங்கள் ரத்து, பயண நேரங்கள் மாற்றி அமைப்பது உட்பட பயணத் திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு முன்னதாகவே உடனுக்குடன் அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன….

The post மாண்டஸ் புயல் எச்சரிக்கை விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Mandes Storm Warning Airport ,Chennai ,Mandas ,Bengal Sea, ,Chennai Airport ,Montes Storm Warning Airport ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...