×

பாரதிராஜாவை கவுரவிக்கும் வெற்றிமாறன்

இயக்குனரும், தயாரிப்பாளருமான வெற்றிமாறனின் பன்னாட்டு திரைப்பட மற்றும் கலாச்சார நிறுவனமும், வேல்ஸ் பல்கலைக்கழக காட்சி தகவலியல் துறையும் இணைந்து, பாரதிராஜாவை கவுரவிக்கும் விதமாக நடத்தும் நிகழ்ச்சிக்கு ‘தமிழ் பேசிய சினிமாவை தமிழ் சினிமாவாக மாற்றிய பாரதிராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாரதிராஜாவின் படங்கள் திரையிடப்படுகிறது. அதை தொடர்ந்து படத்தை பற்றிய விவாதங்களும், உரையாடலும் நடக்கிறது.

வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சியில், பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘கிழக்குச்சீமையிலே…’ ஆகிய வெற்றிப் படங்கள் திரையிடப்படுகின்றன. ஐந்து நாட்கள் நிகழ்ச்சியிலும் வெற்றிமாறன் கலந்துகொள்கிறார். தவிர ஆர்.கே.செல்வமணி, சேரன், அமீர், சத்யராஜ், ரேகா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

Tags : Vetrimaaran ,Bharathiraja ,International Film and Culture Institute ,Department of Visual Informatics ,University of Wales ,
× RELATED டியர் ரதி பிரச்னையில் சிக்கும் டேட்டிங் ஜோடி