×

மரத்தில் இருந்து விழுந்து நடிகர் நிவின் பாலியின் மேக்கப்-மேன் பலி

கோழிக்கோடு அருகே மலையாள நடிகர் நிவின் பாலியின் மேக்கப்-மேன் மரத்தில் இருந்து விழுந்து இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவரிடம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஷாபு(37) என்பவர் மேக்கப்-மேனாகவும், உதவியாளராகவும் இருந்து வந்தார். இவரது வீடு கோழிக்கோடு புல்பள்ளி பகுதியில் உள்ளது.

இந்த நிலையில் ஷாபு நேற்றிரவு வீட்டு முன் உள்ள மரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்கார விளக்குகளை மாட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷாபு பரிதாபமாக இறந்தார். ஷாபுவின் மறைவுக்கு நடிகர்கள் துல்கர் சல்மான், அஜூ வர்க்கீஸ் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

Tags : Nivin Pali ,make-up man ,
× RELATED நிவின் பாலியின் புதிய படம் அறிவிப்பு