×

சீதை ஆகிறார் கியரா

பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் கியரா அத்வானி. சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த டோனி படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர். தெலுங்கிலும் ஓரிரு படங்களில் நடித்தார். இப்போது பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படத்தில் இவரை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது. ஆதி புருஷ், ராமாயணம் கதையை தழுவிய படம். இதில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். சீதையாக நடிக்கவே கியரா அத்வானியிடம் பேசி வருகின்றனர். இதற்கிடையே சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என தகவல் பரவியது. இதை படக்குழு மறுத்துள்ளது. இது பான் இந்தியா படம் என்பதால் தேசிய அளவில் பிரபலமான நடிகையை நடிக்க வைக்கவே பட தயாரிப்பு நிறுவனம் விரும்புகிறதாம். இதனாலேயே கியராவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர்.

Tags : Siara ,Kiara ,
× RELATED விமர்சனம்