×

படுகவர்ச்சி காட்டிய நயன்தாரா; விக்னேஷ்சிவன் செய்த அதகளம்

அஜீத்துடன் பில்லா படத்தில் நீச்சல் உடையில் நடித்தபிறகு கவர்ச்சி நாயகி வேடங்களை ஏற்றாலும் அதில் விரசம் இல்லாமல் நடித்து வருகிறார் நயன்தாரா. கடைசியாக அவர் நடித்து திரைக்கு வந்த தர்பார் படத்திலும் சேலை கட்டித் தான் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து அவர் தெய்வீகத்துக்கு மாறினார். ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மன் வேடத்தில் நடித்தார். கையில் சூலம், கண்களில் கோபமாக காளிபோல் நடித்திருந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளி யிடப்பட்டது.

இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இதையடுத்து தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். இதில் சமந்தாவும் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். விக்னேஷ் சிவன் உடன் நயன்தாரா அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்கிறார். ஒவ்வொருமுறை சுற்றுலாவின்போதும் இருவரும் செல்பி புகைப்படம் எடுத்து பகிர்வார்கள்.

அவைகளை நிறைய பார்த்து ரசிகர்கள் சோர்ந்துபோன நிலையில் அனைவரையும் கண்களை அகல விரித்து பார்க்க வைக்கும் அளவுக்கு படுகவர்ச்சியாக நயன்தாரா புகைப்படத்தை விக்னேஷ்சிவன் வெளியிட்டிருக்கிறார்.

தொடைப் பகுதியிலிருந்து கீழ் வரை பளபளக்கும் கால்கள் பளிச்சென தெரியும்  மாடர்ன் உடை அணிந்து பின்னணியில் சூரியனின் கதிர்கள் அவருக்கு முத்தமிடுவதுபோல் இந்த புகைப்படம் ரொம்பவும் வித்தியாசமாக படமாக்கப்பட்டி ருக்கிறது. என்னதான் சீனியர் நடிகை என்றாலும் நயன்தாராவிடம் இன்னும் கவர்ச்சி குறைந்தபாடில்லை என்று ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர்.

Tags : Nayanthara ,Padukavarchi ,Vikneshivan ,
× RELATED மூக்குத்தி அம்மன் 2; மீண்டும் அம்மனாக நடிக்க நயன்தாரா மறுப்பு