×

ஞானவாபி வழக்கு மசூதி அப்பீல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பிரயாக்ராஜ்: ஞானவாபி மசூதியில் வழிபாடு செய்ய அனுமதி கோரிய வழக்கில் வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மசூதி நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதிக்க கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், மசூதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு நியமித்தது. இக்குழு மசூதியை ஆய்வு செய்தபோது, மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆய்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு முழு பாதுகாப்பு தரும்படி கடந்த மே 17ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், சிவலிங்கம் பாதுகாப்பு தொடர்பாக வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மசூதி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு மீதான விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் வரும் 29ம் தேதிக்கு நேற்று ஒத்திவைத்து உத்தரவிட்டது….

The post ஞானவாபி வழக்கு மசூதி அப்பீல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Gnanawabi ,Prayagraj ,Varanasi Court ,Dinakaran ,
× RELATED ஞானவாபி மசூதியின் பாதாள அறையில்...