×

Man vs Wild ஷூட்டிங்கில் ரஜினிக்கு லேசான காயம்

அடர்ந்த காட்டில் சென்று சாகசம் செய்யும் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பயணித்தது போல, நடிகர் ரஜினிகாந்த்தும் காட்டுப் பகுதியில் சாகச பயணம் மேற்கொண்டார். அடர்ந்த காட்டுப் பகுதிகளில் உயிர் வாழ்வது எப்படி, காட்டாறு வெள்ளங்களில் தப்பிப்பது எப்படி என்பது போன்ற சாகசங்களை செய்து, அதை ஒரு தொடராக டி.வி சேனலில் வெளியிட்டு வருபவர் பியர் கிரில்ஸ். அவருக்கு உலகம் முழுவதும் பல கோடி பார்வையாளர்கள் இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு பியர் கிரில்ஸ் உடன் இத்தகைய திரில்லான பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டார். தற்போது பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் இத்தகைய காட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவில் இந்த சாகச பயணம் நடந்தது. இதில் ரஜினிகாந்த் தொடர்புடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

படப்பிடிப்பின் போது அவருக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மைசூருவில் இருந்து நேற்று விமானம் மூலமாக ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் எந்த காயமும் ஏற்படவில்லை. சிறு முள் குத்தி விட்டது என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

Tags : Rajini ,shooting ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி, சந்திரபாபு நாயுடுவுக்கு ரஜினி வாழ்த்து..!!